குடும்ப உறுப்பினரில் ஒருவர் உடல்நலம் பாதிப்படைகிறார் என்ற தகவலால் குடும்பமே அதிர்ச்சியடைவதை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். அதேவேளையில், மருத்துவ சிகிச்சைக்கான நிதி தாக்கங்களை தவிர்த்து, இதுபோன்ற தகவலால் உணர்ச்சிவசப்படுவதற்கு நாம் தயாராக இல்லை. Click here Diha Clinic | Healthcare Packages
ஆனால், முழு உடல் பரிசோதனை (Master Health Check- MHC) மூலம் உடல் நல பாதிப்புகளை கண்டறியலாம். மாறாக உடல் பாதிப்பைக் கவனிக்காமல் விட்டால் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனைகள் அல்லது வேறு உடல் நல பாதிப்புகளாக இருக்கலாம்.
யார் எல்லாம் முழு உடல் பரிசோதனை செய்தல் கட்டாயம் அவசியம்
குறிப்பாக 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பரிசோதனை செய்து கொள்ளலாம். 50 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் ஆண்டுக்கு ஒரு முறையும் பரிசோதனை செய்ய வேண்டும்.
முழு உடல் பரிசோதனை என்பது தற்போது ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், உங்களுக்கு உடல் நல பிரச்சனை இருக்க வேண்டிய அவசியமில்லை. முன்கூட்டியே நோயறிதல் என்பது உங்களுக்கு சிறந்த உடல் நல பாதுகாப்பை தரும்.
முழு உடல் பரிசோதனையின் நன்மைகள்
1. உங்களின் தற்போதைய உடல் ஆரோக்கியத்தை மதிப்பீடு செய்தல்
உங்கள் ஒட்டுமொத்த உடல் நலம் எப்படி உள்ளது என்பதை அறிவது நல்லது. பரிசோதனை என்பது உங்களின் தற்போதைய உடல் நலத்தைப் பற்றி முழுமையாக அறிவதாகும். பரிசோதனை குறித்த பதிவுகள் எதிர்கால குறிப்புகளுக்கு உதவும்.
2. எந்தவொரு நோயையும் முன்கூட்டியே கண்டறிதல்
உங்கள் உடல் நலம் குறித்தும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். மேலும், மருத்துவர் ,பரிசோதனை முடிவுகளை மதிப்பீடு செய்து உங்கள் நலம் குறித்து ஆலோசனைகளை தர முடியும். இதனால் எந்தவொரு உடல் நல பிரச்சனைகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளித்து நிர்வகிக்க முடியும்.
3. சிறந்த உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை
உடல் நலம் குறித்த பரிசோதனைகள் உங்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்த முடியும். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் குறித்து மருத்துவர் ஆலோசனைகளை வழங்க முடியும். தொடர் உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் வரக்கூடிய உடல் நல பிரச்சனைகளுக்கு தகுந்த ஆலோசனையை மருத்துவர் பரிந்துரைக்க முடியும்.
முழு உடல் பரிசோதனை பேக்கேஜ் விவரங்கள்:
திஹா கிளினிக் ஆய்வகம் என்.ஏ.பி.எல்.(NABL) அங்கீகார சான்றிதழை பெற்றுள்ளது.
வீடுகளுக்கு நேரில் வந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது.
கிளினிக்கில் இருந்து 3 கி.மீ. எல்லைக்குள் ரூ.100, கிளினிக்கில் இருந்து 5 கி.மீ. எல்லைக்குள் ரூ.150. நேரம்:
காலை 5.30 மணி முதல் இந்த சேவை தொடங்கும்.
திஹா கிளினிக்கிற்கு வருகை தரும் ஒவ்வொரு நபரையும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முழு உடல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டுமா?
திஹா கிளினிக்கை +91 80565 80565 / 93848 80818 என்ற எண்ணில் அழைக்கலாம்.
திஹா கிளினிக், எண் 6, 6-வது மெயின் ரோடு, நங்கநல்லூர் (இந்தியன் வங்கி எதிரில்)
திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை (காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை).
No 6, 6th Main Road, Opp.Indian Bank. Nanganallur, Chennai - 600061
About Diha Clinic
Diha is a multi-speciality clinic that brings high-quality healthcare at a reasonable cost to Nanganallur, Chennai, and the surrounding areas. It is a not-for-profit clinic, set up by the Diha Trust.
It’s an outpatient facility that offers quality healthcare across General Medicine, Diabetology, Orthopaedics, Obstetrics & Gynaecology, Paediatrics, Cardiology, Dermatology, ENT & Physiotherapy. It has an NABL accredited Lab and also offers ECG, Echo, TMT, X-Ray and Ultrasound inhouse.
Places we serve: Our customers mostly come from Nanganallur, Adambakkam, Madipakkam, Alandur, Medavakkam, Pazhavanthangal, Keelkattalai, Puzhuthivakkam, Ullagaram, Guindy, St. Thomas Mount, Meenambakkam, Velacherry & more.
Copyright © 2024 Diha Clinic. All rights reserved | Designed by Spidergems