

வியர்வை அலர்ஜி என்றால் என்ன?
வியர்வை அலர்ஜி இதை ஆங்கிலத்தில் ப்ரிக்லி ஹீட் என்று அழைப்பாங்க. தமிழில் வியர்வை அலர்ஜி என்றும் சொல்லலாம். பொதுவாக பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை யாரை வேண்டுமானால் தாக்கம் ஏற்படுத்தலாம்
வியர்வை அலர்ஜி எங்கே வருகிறது?
வியர்வை எந்த பகுதியில் ஏற்படுகிறது என்றால். “வியர்வை எங்கு தேங்குகிறதோ, அந்த பகுதிகளில் வியர்வை அலர்ஜி ஏற்படும். உதாரணத்திற்கு, கழுத்தில், கைகள் மடங்கும் இடங்களில், அக்குளில், மேலும் பெண்களுக்கு மார்பகத்தின் கீழ் பகுதிகளில் வியர்வை அதிகமாக தேங்கும். மேலும், ஆண் மற்றும் பெண் இருவருக்கும் தொடை பகுதியில், கை மடிக்கும் இந்த இடத்தில் வரும். இந்த இடங்களில் தான் வியர்வை அதிகமாக தேங்கும், அதனால் அங்கு வியர்வை அலர்ஜி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இதற்கு என்ன காரணங்கள்?
மிகவும் பொதுவான காரணம் என்னவெனில்
1# வெப்பமான காலநிலை – நாம் இருக்கும் இடம்வெப்பமான காலநிலை தான் இது ஒரு முக்கிய காரணி
2# சமையலறையில் உஷ்ணத்தில் வேலை செய்வது வியர்வை தேங்க வைக்கிறது அதனால் வியர்வை அலர்ஜி வருவதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. மற்றொரு காரணம் என்னவென்றால் நாம் பயன்படுத்தும் ஆடைகள், ரொம்ப தடிமனான சிந்தெடிக் ஆடைகள், ஜீன்ஸ் மாதிரியான துணி, இதெல்லாம் வியர்வையை அதிகப்படுத்தும். அது மட்டும் இல்லாமல் அதிகமான உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது வியர்வை அலர்ஜி அதிகமாகும்.
அவற்றின் அறிகுறிகள் என்ன?
அறிகுறிகள் என்ன என்றால் உடலில் பொறி பொறியாக வரும். முதலில் சிவப்பாக தெரியாது, ஆனா போக போக சிவப்பாக தெரியும். இன்னும் ஸ்க்ராட்ச் பண்ண பண்ண இன்னும் தொற்றாக கூட ஆகலாம். அப்புறம் அது சரியாகும் போது ஸ்கின் பீல் ஆகி ஒரு நிறமாற்றத்தோடு ஒரு லேசான நிறத்தோட சரியாகும். இது தான் முக்கியமான அறிகுறிகள்.
செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதது என்ன?
கண்டிப்பா நம்ம வெப்ப காலநிலையை மாற்ற முடியாது. அதை தவிர வேற என்ன பண்ணலாம். நம்ம சுற்றுச்சூழலை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். எப்படி வைத்திருக்கலாம்? ஒரு டேபிள் ஃபேன் வைத்து, சமையலறையில் வேலை செய்யலாம். வீட்டில் ஏசி இருந்தால் அவ்வப்போது சென்று ஓய்வு எடுக்கலாம். உடை அணியும் வகை முக்கியமானது, வெயில் காலத்தில் நீங்கள் கனமான ஆடைகள் உடுத்தக் கூடாது. மெலிதான ஆடைகள், காட்டன் வகை ஆடைகள் மற்றும் நல்ல காத்தோட்டமா ஆடைகள் தான் உடுத்தனும், ஜீன்ஸ் அணிவதைத் தவிர்க்கவும் இன்னொரு விஷயம் என்ன என்றால், உங்களுக்கு இந்த வியர்வை அலர்ஜி இருக்கும்போது அதிகமான உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்வதைத் தவிர்க்கலாம்.
அந்த வியர்வை அலர்ஜி சரியானதுக்கு பிறகு நீங்கள் உங்கள் செயல்கள் மீண்டும் தொடங்கலாம் வைட்டமின் சி எடுத்துக்கொள்ளுவதால், வியர்வையால் ஏற்படும் அலர்ஜி குறையும். உங்களுக்கு மீண்டும் வியர்வை அலர்ஜி வருவதை தவிர்க்கலாம். அப்போ வைட்டமின் சி “எவற்றுள் எல்லாம்” இருக்கு… நெல்லிக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் சாத்துகுடி… இந்த வகையான சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.இப்போ நான் சொன்னது எல்லாமே அன்றாட வாழ்வில், வியர்வை அலர்ஜி ஏற்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம், எப்படி சிகிச்சை அளிக்கலாம் என்பதுதான் .
இப்போ நான் கூறிய முன்னெச்சரிக்கை மீறி உங்களுக்கு சரி ஆகவில்லை என்றால் தோல் மருத்துவரை தொடர்பு கொள்ளவும். அவரு உங்களோட அலர்ஜி தீவிரம் பார்த்துட்டு உங்களுக்கு என்னமாறி மருந்து தேவை என்று மருத்துவர் பரிந்துரைப்பார்
தோல் மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
இப்போது எனக்கு லேசான வியர்வை அலர்ஜி இருக்கு, அப்படியென்றால் 3 முதல் 4 நாட்கள் காத்திருந்து அதைப் பார்க்கலாம். அதற்குமேல் தொந்தரவு இருந்தால் நீங்கள் காத்திருந்து பார்ப்பது பயன் கிடையாது. உங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டும் உதவபோறது இல்லை. உங்களுக்கு மருந்துகள் உதவியுடன் சிகிச்சை நிச்சயமாகத் தேவை என்று அர்த்தம். அதனால் நீங்கள் தோல் மருத்துவரை சந்தித்தால், உங்களுக்கு சிறந்த உதவியை பெறக்கூடும்.
For Appointment. Call 80565 80565 Now! 6 am to 8 pm (Mon to Sat)
Diha Clinic
No. 6, 6th Main Road, Opp. Indian Bank, Nanganallur, Chennai – 600 061